சற்று முன்னர் புதைக்கப்பட்டது பிரியந்த குமாரவின் சடலம் (படங்கள்)
பாகிஸ்தானில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவதனவின் சடலம் சற்றுமுன்னர் புதைக்கப்பட்டது.
கனேமுல்ல பகுதியில் உள்ள மயானத்தில் அவரது உடல் புதைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் − சியல்கோட் பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் முகாமையாளராக கடமையாற்றிய பிரியந்த குமார தியவதன, மத நிந்தனை செய்ததாக கூறி அவரை நூற்றுக்கணக்கானோர் சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்து பின்னர் எரியூட்டப்பட்டார்.
பிரியந்த குமாரவின் உடல் எச்சங்கள் நேற்று முன்தினம் (06) மாலை நாட்டை வந்தடைந்தது. உடல் எச்சங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் நடத்தப்பட்டதுடன், சடலம் சீல் செய்யப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இவ்வாறு கையளிக்கப்பட்ட உடல், பிரியந்த குமார தியவதனவின் வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக நேற்று அதிகாலை 3 மணி முதல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அன்னாரது இறுதிக் கிரியைகள் சற்று முன்னர் (08) இடம்பெறற்றது.










