நுவரெலியாவில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு
Nuwara Eliya
Sri Lanka Police Investigation
By Vanan
நுவரெலியா காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட கிரகரி வாவியில் நேற்று (16) மாலை சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்தனர்.
சடலமொன்று மிதப்பதைக் கண்டு பிரதேசவாசிகள் நுவரெலியா காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்படவில்லை

மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. சடலம் உருக்குலைந்த நிலையில் இருப்பதன் காரணமாக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வாவியில் பாய்ந்து உயிரிழந்தாரா? அல்லது எவராவது கொலை செய்து வாவியில் எறிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி