ஓடும் ஆம்புலன்சில் இருந்து வீதியில் வீசப்பட்ட சடலம்
இந்தியாவில் (India) உயிரிழந்த ஒருவரின் உடல் ஓடும் ஆம்புலன்சில் இருந்தவாறே நடுவீதியில் இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் உத்தர பிரதேசம் மாநிலம் கோண்டா பகுதியில் உள்ள பால்பூர் ஜாட் கிராமத்தில் சாலையில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் இறந்தவரின் குடும்பத்தினரே சடலத்தை வீசியது தெரியவந்தது.
சடலம் வீசப்பட்ட காணொளி
அப்பகுதியில் ஏற்பட்ட பிரச்னையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹிரைடே லால் என்பவர் இறந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள், தங்களது கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக சடலத்தை வீசி சாலையில் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், அவர்களை சமாதானம் செய்து காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
ஓடும் ஆம்புலன்சில் இருந்து சடலம் வீசப்பட்ட காணொளி தற்போது சமூக ஊடங்களில் வைரலாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
