யாழ் - கீரிமலையில் மீட்கப்பட்ட வெடிகுண்டு!
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
By Sathangani
யாழ்ப்பாணம் (Jaffna) - கீரிமலைப் பகுதியில் வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கீரிமலை - புது கொலணி பகுதியில் நேற்றையதினம் (09) குறித்த வெடிகுண்டு மீட்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் குறித்த வெடிகுண்டு இருப்பது அவதானிக்கப்பட்டது.
வெடிகுண்டு மீட்பு
இந்தநிலையில் தெல்லிப்பழை காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் வழங்கப்பட்டது.
அந்தவகையில் நேற்றையதினம் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் குறித்த வெடிகுண்டை பாதுகாப்பாக மீட்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி