தலிபான்களின் கோட்டைக்குள் நுழைந்து வெடிவைத்த ஐ.எஸ் - சீனா வெளியிட்ட அறிவிப்பு
ஆப்கானிஸ்தானின் - காபூல் விமான நிலையம் அருகே நேற்று நடந்த இரு மனித வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 12 அமெரிக்க இராணுவத்தினர் உள்ளிட்ட 108 பேர் கொல்லப்பட்டனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் 143 பேர் படுகாயமடைந்தனர். இந்த விடயத்தினை ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த காட்டுமிராண்டித்தனமான குண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.
அந்த வகையில், சீனாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் போது இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவித்த விடயம்,
“காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. ஆப்கானிஸ்தானில் மாற்றம் எந்த சலசலப்பும் இன்றி நிகழ்வதை அனைத்து தரப்பும் உறுதி செய்ய வேண்டும்.
காபூல் தாக்குதலில் சீன நாட்டவர்கள் யாரும் பாதிப்பு அடைந்ததாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.