இலங்கை தமிழர் போண்டா மணி மரணம் குறித்து வெளியான தகவல்
தமிழ் நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் நேற்று(23) இரவு காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் தனது வீட்டில் திடீரென கீழே விழுந்ததில் மூச்சுப் பேச்சு இல்லாமல் மயங்கியவுடன் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்ற நிலையில், போண்டா மணி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சோகத்தில் ஆழ்த்திய மரணம்
இவரது மரணம் திரைதுறையினரையும் இரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவர் இரு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில், ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்துள்ளார்.
“பவுனு பவுனுதான்” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிய போண்டா மணி வடிவேலுவுடன் இணைந்து நடித்த பல காமெடி காட்சிகள் ரசிகர்களை எந்த காலத்திலும் சிரிக்க வைக்கும்.
தமிழ் சினிமாவில் சுமார் 270 படங்களில் துணை காமெடி நடிகராக நடித்துள்ளார்.
இலங்கை தமிழர்
இலங்கையில் இருந்து சினிமா கனவுடன் சென்னைக்கு வந்த கேத்தீஸ்வரன் என்ற போண்டா மணி தினமும் பசிக்கு சாப்பாடு சாப்பிடும் அளவுக்கு காசு இல்லாத நிலையில், ஒரு போண்டாவை வாங்கிக் கொண்டு அதையே உணவாக பல நாட்கள் சாப்பிட்டுள்ளார்.
சினிமாவில் இவர் அறிமுகம் ஆகும் போது, கேத்தீஸ்வரன் என்கிற பெயரை மாற்ற வேண்டும் என சொல்லும் போது தனது குருநாதர் கவுண்டமணி எப்படி தனது பெயரை கவுன்ட்டர் மணி என மாற்றிக் கொண்டாரோ அதே போல போண்டா மணி என மாற்றிக் கொள்வோம் என மாற்றிக் கொண்டாராம்.
போண்டா மணி மருத்துவமனையிலேயே இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், பலரும் உதவி செய்ய முன் வந்துள்ளனர்.
குணமடைந்து வீடு திரும்பி விட்டார் என எதிர்பார்க்கப்பட்டு வந்து நிலையில், திடீரென அவர் உயிரிழந்ததுள்ளார். இவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |