சாட்டை துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனை! எடுத்து செல்லப்பட்ட இரு புத்தகங்கள்
நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகரான சாட்டை துரைமுருகன் வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டு தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பான புத்தகமொன்று எடுத்து செல்லப்பட்டுள்ளது.
திருச்சி வயலூர் சாலை சண்முகா நகரில் உள்ள அவரின் வீட்டிலேயே நேற்று(02)இந்த தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்
அதேவேளை, சோதனை மேற்கொள்ளப்பட்ட வேளையில் சாட்டை துரைமுருகன் வீட்டில் இல்லாததால் அவரது மனைவி மாதரசியிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அவரது வீட்டில் இருந்து நெடுமாறன் எழுதிய 'பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்' என்ற புத்தகமும் 'திருப்பி அடிப்பேன்' என்ற சீமான் எழுதிய புத்தகமும் எடுத்துச் செல்லப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மறு விசாரணை
இந்நிலையில், சாட்டை துரைமுருகனின் மனைவியிடம் மறு விசாரணை அழைப்பாணையும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் நேற்று சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |