பொரளை பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடு:மாற்றுவழிகளை பயன்படுத்தும்படி அறிவுறுத்தல்
பொரளை, மொடல் பார்ம் சந்தியிலிருந்து டீ.எஸ். சந்தி நோக்கி கொழும்பு நகரத்திற்குள் நுழையும் ஒழுங்கில், அவசர வீதித் திருத்தப் பணி காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
டீ.எஸ். சேனநாயக்க வீதியில், டீ.எஸ். சந்திக்கு அருகில் அமைந்துள்ள நீர் விநியோகக் குழாய் அமைப்பின் அவசர கசிவு ஒன்றைத் திருத்துவதற்காக தற்போது குறித்த வீதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இதன் காரணமாக கொழும்புக்குள் நுழையும் ஒழங்கில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சாரதிகளுக்கான அறிவுறுத்தல்
பாராளுமன்ற வீதி, காசல் வீதி மற்றும் மொடல் பார்ம் ஊடாக டீ.எஸ். சேனநாயக்க வீதி வழியாக கொழும்புக்கு வரத் திட்டமிடும் சாரதிகளுக்காக பின்வரும் மாற்றுப் பாதைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி முதல் மாற்று வழி: மொடல் பார்ம் சந்தியிலிருந்து திரும்பி, பழைய புலர்ஸ் வீதி ஊடாக மயான சுற்றுவட்டம் வழியாகப் பயணம் செய்தல்.
இரண்டாவது மாற்று வழி: ஆயுர்வேத சுற்றுவட்டத்திலிருந்து கொட்டா வீதிக்குச் சென்று, பொரளை சந்தி வழியாகப் பயணம் செய்தல்.
போக்குவரத்து நெரிசலைக் குறைத்துக் கொள்வதற்காக மேற்கண்ட மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் சாரதிகளிடம் கேட்டுக்கொள்கின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |