கண்டியில் 42 மணித்தியால நீர் வெட்டு
ஹரிஸ்பத்து பூஜாபிட்டிய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக கண்டியின் சில பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இந்தத் தடை நாளை (21) புதன்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கி, நாளை மறுதினம் (23) வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி வரை தொடரும்.
மெடவல (பழைய மற்றும் புதிய சேவைக் குளங்கள்), கல்லனவத்த, கலகெதர மற்றும் மாவத்தகம ஆகிய பகுதிகளும், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும்.
சிக்கனமாக பயன்படுத்தவும்
நீர் விநியோகத் தடை காரணமாக நுகர்வோருக்கு ஏற்படவுள்ள சிரமத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வருத்தம் தெரிவித்துள்ளது.

மேலும் நீர் வெட்டு ஏற்படுவதற்கு முன்பு தேவையான நீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |