முதல் பிரசவத்திற்கு சென்ற தாய்க்கு நேர்ந்த துயரம் : உறவுகள் பெரும் சோகத்தில்
வட்டுபிட்டியலை ஆதார வைத்தியசாலையில் தனது முதல் பிரசவித்தற்கு சென்ற தாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தமை உறவுகளை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கலேலிய ரத்மலே வத்த பகுதியைச் சேர்ந்த நிம்மி சகுந்தலா என்ற 22 வயதுடைய தாயே உயிரிழந்துள்ளார். மேலும் அவர் பெற்ற குழந்தை பிரசவத்திற்கு முன்பே இறந்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதி
குறித்த தாய் கடந்த 18ஆம் திகதி பிரசவத்திற்காக வட்டுபிட்டியல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த தாயின் முதல் பிரசவம் இதுவாகும் என்றும், தாய்க்கு சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தாய் மற்றும் பிள்ளையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்து மருத்துவமனை காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு
இது தொடர்பில் வத்துப்பிட்டியால ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவிக்கையில்,தாய் மற்றும் பிள்ளையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், பிரேத பரிசோதனையை வத்துப்பிட்டியால ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ள உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.
மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு அதன் பிறகு மரணத்திற்கான காரணம் நீதிமன்றத்திற்கு முன்வைக்கப்படும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |