போத்தல் தண்ணீர் விலை இன்றுமுதல் அதிகரிப்பு
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மற்றும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரின் அதிகபட்ச சில்லறை விலையை உயர்த்தி, நுகர்வோர் விவகார அதிகாரசபை திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது இன்று (10) முதல் நடைமுறைக்கு வருகிறது. புதிய விலைகளின்படி, 500மி.லி முதல் 999மி. லி வரையிலான போத்தல்களை அதிகபட்சமாக ரூ. 70-லிருந்து ரூ. 80-க்கு விற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலைவிபரம் அறிவிப்பு
1 லீற்றர் முதல் 1.49 லீற்றர் வரையிலான போத்தல்களின் விலை ரூ. 100-லிருந்து ரூ. 120 ஆகவும், 1.5 லீற்றர் முதல் 1.99 லீற்றர் வரையிலான போத்தல்களின் விலை ரூ. 130-லிருந்து ரூ. 150 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

2 லீற்றர் முதல் 2.49 லீற்றர் வரையிலான போத்தல்களின் அதிகபட்ச விலை ரூ. 160-லிருந்து ரூ. 180 ஆகவும், 5 லீற்றர் முதல் 6.99 லீற்றர் வரையிலான போத்தல்களின் விலை ரூ. 350-லிருந்து ரூ. 400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத் தமிழினம்… சர்வதேச நீதி தினம்… 7 மணி நேரம் முன்