Boxing ஆஷஸ் போட்டியை கையிலெடுத்த பந்துவீச்சாளர்கள்
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மெல்போர்னில் இடம்பெற்ற 4ஆவது போட்டியில் மொத்தமாக 20 விக்கட்டுக்கள் வீழ்த்தப்பட்டுள்ளது.
இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் இரு அணிகளின் பந்துவீச்சாளர்களும் எதிரணிக்கு கடும் சவாலை விடுக்கும் முகமாக விளையாடியிருந்தனர்.
நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து அணி இந்த போட்டியில் அவுஸ்திரேலியா அணியை முதல் இனிங்ஸில் 152 ஓட்டங்களுக்குள் மட்டுப்படுத்தியது.
ஜோஷ் டங்
இங்கிலாந்தின் ஜோஷ் டங் மற்றும், அட்கின்சனின் அபார பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன.

எனினும் தனது முதல் இனிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணிக்கு துடுப்பாட்டம் என்பது பெரிதாக கைகொடுக்கவில்லை.
தனது சொந்த மைதானத்தில் களமிறங்கியுள்ள அவுஸ்திரேலிய அணி ஸ்டார்க்(2), நார்ஸர்(4) மற்றும், பேலன்ட்(2) ஆகிய வீரர்களின் உதவியோடு இங்கிலாந்தை 110 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தியது.
அவுதிரேலியா
இங்கிலாந்து கிரிக்கெட் அணி அவுதிரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் 3 டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் அவுஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் தொடங்கியது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் நடக்கும் இப்போட்டி Boxing Day டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.
இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 5 விக்கெட் வீழ்த்தினார். அட்கின்சன் 2 விக்கெட்டும், ஸ்டோக்ஸ், கார்சே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |