போலி கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கையர்! கட்டுநாயக்கவில் கைது
போலி கடவுச்சீட்டை (Fake passport) பயன்படுத்தி மலேசியா செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ் சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவரே இன்று(10) அதிகாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவின் கோலாலம்பூர் நோக்கிச் செல்லவிருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.
வெளிநாடு
இந்நிலையில், இவர் போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை தயாரித்து வெளிநாடு செல்ல முயன்றவேளை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள மனித கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |