வேற்றுக்கிரகவாசியை கைது செய்யும் ட்ரம்ப்: பேசுபொருளான சமூக ஊடக பதிவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது “ட்ரூத் சோஷியல்” சமூக ஊடகக் கணக்கில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட விசித்திரமான புகைப்படங்களைப் பகிர்ந்திருப்பது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
அவற்றில் மிகவும் கவனம் ஈர்த்த புகைப்படம் ஒன்றில், சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டதாக தோற்றமளிக்கும் ஒரு வேற்றுக்கிரகவாசியின் அருகில் ட்ரம்ப் நிற்பது காணப்படுகிறது.
அந்த வேற்றுக்கிரகவாசி உயரமான உருவம், சாம்பல் நிற தோல் மற்றும் பெரிய கருப்பு கண்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க இரகசிய சேவை
அவரைச் சுற்றி அமெரிக்க இரகசிய சேவை முகவர்களும், ஆயுதம் ஏந்திய அமெரிக்க வீரரும் காணப்படுகின்றனர்.

மேலும், “ஸ்பேஸ் ஃபோர்ஸ்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பிற புகைப்படங்களில், விண்வெளி நிலைய கட்டுப்பாட்டு அறையில் டிரம்ப் நிற்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
சில படங்களில், தன்னைச் சுற்றியுள்ள அதிகாரிகளை விட பல மடங்கு உயரமாக டிரம்ப் காட்டப்பட்டிருப்பதும் இணைய பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த AI புகைப்படங்கள் வெளியாகியிருப்பது, அமெரிக்க அரசு அண்மையில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) தொடர்பான சில இரகசிய ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டதையடுத்து வந்துள்ளதால் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 டிரில்லியன் அமெரிக்க டொலர்
இதற்கிடையில், 2025ஆம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்றால் “கோல்டன் டோம்” எனப்படும் மாபெரும் ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக ட்ரம்ப் முன்பே அறிவித்திருந்தார்.
அடுத்த 20 ஆண்டுகளில் 1 டிரில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான முதலீடு தேவைப்படும் என மதிப்பிடப்படும் இந்தத் திட்டம், அமெரிக்காவின் தரை மற்றும் விண்வெளி சார்ந்த பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாக கூறப்படுகிறது.
ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் அதிவேக ஏவுகணைத் தொழில்நுட்பங்களில் முன்னேறி வரும் நிலையில், அமெரிக்காவின் தற்போதைய பாதுகாப்பு அமைப்புகள் போதுமானதாக இல்லை என்றும், புதிய தலைமுறை பாதுகாப்பு திட்டங்கள் அவசரத் தேவையாக உள்ளன என்றும் பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |