முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம்: திரைமறைவில் அரங்கேறிய சதி
முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் திடீர் மரணம், இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும் பல்வேறு விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை உள்ளிட்ட பல முக்கிய மற்றும் சர்ச்சைக்குரிய வழக்குகள் தொடர்பில் பல ரகசியங்களை அறிந்த ஒரு உயர்மட்ட அதிகாரியின் மரணம் என்பதால், இதன் பின்னணியில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அவர் வசம் இருந்த முக்கிய தகவல்கள் மற்றும் விசாரணைகளின் திசைகளை முடக்குவதற்காக ஏதேனும் திரைமறைவுச் சதித்திட்டங்கள் அரங்கேற்றப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் தற்போது பலமாக எழுந்துள்ளது.
முக்கிய சாட்சிகளும் அதிகாரிகளும் இவ்வாறான மர்மமான சூழலுக்கு உள்ளாவது, இலங்கையின் சட்டம், ஒழுங்கு மற்றும் முக்கிய வழக்குகளில் உண்மையான நீதியைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சவால்களையே மீண்டும் வெளிப்படுத்துவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் நியூஸ் இன்சைட்ஸ் (Newsinsights) நிகழ்ச்சி...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |