வெளிவிவகார அமைச்சின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்
வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஆவணச் சான்றளிப்புச் சேவைகள், தற்போது படிப்படியாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லையிலுள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவில் சான்றளிப்புச் சேவைகள் வரையறுக்கப்பட்ட அளவில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியம்
இந்த அமைப்பை விரைவில் முழுமையாக மீட்டெடுப்பதற்குரிய பணிகள் தொழில்நுட்பக் குழுக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வழக்கத்தை விடக் கூடுதல் நேரம் எடுக்கக்கூடும் என்பதால், பொதுமக்கள் பொறுமையுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அமைச்சு வருத்தம் தெரிவித்துள்ளதோடு, மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |