வயோதிப பெண்ணை வன்புணர முற்பட்ட சிறுவன் கைது - யாழில் சம்பவம்
Jaffna
Sri Lanka Police Investigation
By Vanan
வயோதிப பெண்ணை வன்புணர முற்பட்ட சிறுவன்
யாழ் - வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வயோதிப பெண்ணை வன்புணர முற்பட்ட குற்றத்தில் சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொன்னாலை பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய வயோதிப பெண்ணை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி சைக்கிளில் ஏற்றிச் சென்ற அப்பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் பொன்னாலை காட்டு பகுதிக்குள் வயோதிப பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, வன்புணர முற்பட்டுள்ளார்.
தடுப்புக் காவலில் வைத்து விசாரணை
அதனை அடுத்து குறித்த பெண் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்ற நிலையில், வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் சிறுவனை கைது செய்து, தடுப்புக் காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி