முல்லைத்தீவில் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் காவல்துறை பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில் இன்று (3) மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்துள்ளான்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் புளியங்குளம் அலகரை கிராமத்தை சேர்ந்த மோகனராசா லோயிதன் (வயது 5) என்ற சிறுவனே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான்.
யானை சட்டவிரோத மின்சார வேலியால் நிகழ்ந்த விபரீதம்
சிறுவன் அம்மம்மாவுடன் புல்லு வெட்டுவதற்கு சென்ற போது யானைக்காக அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத மின்சார வேலியில் சிறுவனின் கழுத்து அகப்பட்டதால் மரணம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவன் மின்சாரம் தாக்கிய நிலையில் ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளான்.
உடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சட்டவைத்திய அதிகாரியின் விசாரணைகளுக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான்காவல்துறையினர்மேற்கொண்டுவருகின்றனர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியில் நனைந்த தம்பலகாமம்…! 8 மணி நேரம் முன்