காதலியின் வீட்டிற்கு சென்று காணாமல்போன இளைஞன் : இவர்களை தெரியுமா..!
குளியாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் தனது காதலியின் வீட்டுக்கு சென்ற நிலையில் காணாமல் போன சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞனின் காதலி மற்றும் குடும்ப உறுப்பினர்களை கைது செய்வதற்கு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சம்பவத்தின் பின்னர் தற்போது காணாமல் போயுள்ள பிரதான சந்தேகநபரின் குடும்பத்தை கைது செய்வதற்கு பொதுமக்களின் ஆதரவை கோரும் வகையில் அவரது குடும்ப புகைப்படத்தை காவல்துறையினர் இன்று (02) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.
36 வயதுடைய சுசிதா ஜயவன்ச என்பவர்
குளியாபிட்டிய கபலாவ பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சுசிதா ஜயவன்ச என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தார். கடைசியாக காதலியின் தந்தை தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதை அடுத்து அவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அவரை காதலியின் தந்தை மற்றும் இரண்டு கொத்தனார்களுடன் சேர்ந்து தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதன்படி குறித்த இளைஞனை பிரதேசத்தில் உள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு காதலியின் தந்தை கூறியதாக கைது செய்யப்பட்ட கொத்தனார்கள் இருவரும் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சம்பவத்தின் பின்னர் தலைமறைவு
இச்சம்பவத்தின் பின்னர் பிரதான சந்தேகநபரும் அவரது மனைவியும், காணாமல் போன இளைஞனின் காதலியான அவரது மகள் மற்றும் இரண்டு மகன்களும், பிரதான சந்தேக நபரின் சகோதரி மற்றும் அவரது கணவரும் வீடுகளை விட்டு வெளியேறி பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதுடன், தப்பிச் செல்வதற்காக வாடகை அடிப்படையில் பெறப்பட்டவை எனத் தெரியவந்துள்ள NW PK-0125 இலக்கம் கொண்ட வெள்ளி நிற Suzuki வானையும் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஏதேனும் தகவல் தெரிந்தால்
ஊடகங்களுக்கு காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ளவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல்துறைக்கு அறிவிக்குமாறு காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் பிரதான சந்தேக நபரின் பெற்றோர் மற்றும் மாமனார் குளியாபிட்டிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குளியாபிட்டிய நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |