கடலில் நீராட சென்ற சிறுவர்கள் இருவர் திடீர் மாயம் : மீட்பு பணிகள் தீவிரம்
பாணந்துறை (Panadura) கடற்கரைக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் குழுவுடன் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பாணந்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பண்டாரகம மற்றும் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், நேற்று (16.04.2025) மாலை 5.30 மணியளவில் பாணந்துறை கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்த வேளையில், அங்கு நீராடிக்கொண்டிருந்த போது, ஏற்பட்ட பேரலையில் சிக்கி ஐந்து பேர் நீரில் மூழ்கியுள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்த நேரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பாணந்துறை கடலோர கடற்படை மற்றும் காவல்துறை உயிர்காக்கும் பிரிவினர் இணைந்து மூன்று பேரை மீட்டனர், ஏனைய இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
நீரில் மூழ்கி காணாமல் போனவர்கள் மொஹமட் இர்பான் மொஹமட் முஹம்மது என்ற 15 வயது சிறுவனும், பண்டாரகம, அட்டலுகம பகுதியைச் சேர்ந்த யாசிர் அரபாத் அகமது என்ற மாணவனும் ஆவர். அவர் இந்த வருடம் சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நீரில் மூழ்கி காணாமல் போனவர்களின் சடலங்கள் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

