இந்தியாவின் தலையெழுத்தை மாற்றிய உக்ரைன் - ரஷ்ய யுத்தம்..!
இந்தியா நீண்ட காலமாக ஆயுத இறக்குமதி நாடாக மட்டுமே இருந்து வருகிறது, அதிலும் குறிப்பாக இந்தியா அதிகப்படியான ஆயுதங்களை ரஷ்யாவிடம் வாங்குகிறது.
இந்தியா - ரஷ்யா மத்தியில் பல பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தங்கள் நிலுவையில் இருக்கும் வேளையில் ரஷ்யா - உக்ரைன் போர் மூலம் ஆயுதங்கள், முக்கிய உபகரணங்களின் விநியோகம் தாமதமாகி வருகிறது.
இந்தியா தனக்கு தேவையான அதிகப்படியான ஆயுதங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தாலும், தற்போது ஏற்றுமதி செய்யவும் துவங்கியுள்ளது, இதற்கெல்லாம் பிரதான காரணமாக தற்போது நிலவி வரும் உக்ரைன் - ரஷ்யா யுத்தமே இருக்கிறது.
BrahMos ஏவுகணை
இது மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் ஆயுத ஏற்றுமதியில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் பட்டியலிலும் இந்தியா இடம்பிடித்துள்ளது.
பாதுகாப்புப் படைகளின் மூன்று பிரிவினராலும் பயன்படுத்தப்படும் உலகின் ஒரே ஏவுகணையான பிரம்மோஸ் எதிர்காலத்தில் உலகளாவிய ஏற்றுமதியில் கொடிகட்டிப்பறக்கும் என இந்தியாவின் THE TIMES OF INDIA இணையத்தளம் தெரிவித்துள்ளமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
இந்தியாவின் ஆயுத ஏற்றுமதியிலும், உற்பத்தியிலும் முக்கிய அங்கமாக உள்ளது BrahMos ஏவுகணையை 1998 ஆம் ஆண்டு இந்தியா - ரஷ்யா அரசு மத்தியிலான கூட்டணியில் உருவாக்கப்பட்ட BrahMos Aerospace நிறுவனம் தான் BrahMos உருவாக்குகிறது.
இந்நிறுவனம் இந்திய அரசின் DRDO மற்றும் ரஷ்யாவின் NPO Mashinostroyenia கூட்டணியில் உருவானது. BrahMos ஏவுகணையின் முதல் சோதனை 2001ல் செய்யப்பட்டு, அடுத்த சில வருடத்தில் இந்திய கப்பல் படை, விமான படை, ராணுவத்தில் உள்வாங்கப்பட்டது.
உக்ரைன் மீதான போரின் காரணமாக மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடை மூலம் BrahMos ஏவுகணையின் உற்பத்தி, வடிவமைப்பு, திட்டமிடல் என எதிலும் பாதிப்பு ஏற்பட்டது.
ஏவுகணை வாங்குவதற்கு ஒப்பந்தம்
இதன் காரணமாக, BrahMos ஏவுகணை தயாரிப்பின் ஆரம்பக்கட்டத்தில் வெறும் 15 சதவீத உதிரிபாகங்கள் மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டாலும் தற்போது இது 70 சதவீதமாக உயர்ந்துள்ளது. 30 சதவீத பொருட்களுக்கு ரஷ்யாவை நம்பியிருந்தாலும், இது சமாளிக்க கூடிய வகையில் தான் உள்ளது.
இதேவேளையில் BrahMos ஏவுகணையை BrahMos Aerospace நிறுவனம் பல வகையில் மேம்படுத்தி மிகவும் திறனுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் மாற்றி வருகிறது.
கடந்த வருடம் பிலிப்பைன்ஸ் நாடு இந்திய அரசுடன் 375 மில்லியன் டொலர் மதிப்பிலான BrahMos ஏவுகணை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதை தொடர்ந்து இந்தோனேஷியாவுக்கு 200 மில்லியன் டொலருக்கும், தறப்போது வியட்நாம் அரசு 625 மில்லியன் டொலர் மதிப்பிலான BrahMos ஏவுகணையை வாங்குவதற்கான பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.
ஆயுத ஒப்பந்தம்
அடுத்தடுத்து 3 நாட்கள் உடனான ஆயுத ஒப்பந்தம் பெரும் நம்பிக்கையை இந்திய பாதுகாப்பு துறையில் ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் 2016-17ல் இந்தியாவின் ஆயுத ஏற்றுமதி வெறும் 1,521 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2022-23 ஆம் நிதியாண்டில் 15,920 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
2024-25 ஆம் நிதியாண்டில் இந்திய பாதுகாப்பு ஏற்றுமதி 35000 கோடி ரூபாய் அளவீட்டை தொடும் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
