மூளையில் கிருமித்தொற்று : யாழ். போதனாவில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கிருமித்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சியை சேர்ந்த சுப்ரமணியம் தசிகரன் என்ற 31வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே நேற்று (30) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபருக்கு கடந்த 22ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் 10 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 27ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

மூளையில் ஏற்பட்ட கிருமித்தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |