5 முறை உலகக் கிண்ணம் வென்ற பிரேசிலை முதல்முறையாக வீழ்த்திய ஆப்ரிக்க அணி!
5 முறை உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட பிரேசில் உதைபந்தாட்ட அணியை ஆப்ரிக்கா அணியான மொரோக்கோ அணி வெற்றிகொண்டுள்ளது.
மொரோக்கோ அணியின் வெற்றியானது உதைபந்தாட்ட வரலாற்றில் ஒரு சாதனையாக பார்க்கப்படுகின்றது.
பிரேசில் அணிக்கும் மொரோக்கோ அணிக்கும் இடையில் நேற்றையதினம் நடைபெற்ற நட்பு ரீதியிலான ஆட்டத்தில் மொரோக்கோ அணியானது 2-1 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
மொரோக்கோ அணி வெற்றி
ஆரம்பம் முதலே மிக விறுவிறுப்பாக நடைபெற்ற குறித்த ஆட்டத்தில், மொரோக்கோ அணியின் சொஃபியன் புஃபல் (Sofiane Boufal) 29 ஆவது நிமிடத்தில் 1 கோலை அடித்தார்.
பின்னர், பிரேசில் அணியின் கசிமிரோ (Casemiro) 67ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து ஆட்டத்தை சமநிலைப்படுத்தினார்.
விறுவிறுப்பான போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம், மொரோக்கோ அணியின் அப்டல்ஹமிட் சபிரி (Abdelhamid Sabiri) 2 ஆவது கோலை அடித்தார்.
பின்னர், ஆட்டநேரம் முடியும் வரை எவ்வித கோலும் பெறப்படாமல் 2 -1 எனும் கோல் கணக்கில் மொரோக்கோ அணி வெற்றி பெற்றது.