ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு இலஞ்சம்: கட்சியொன்றின் செயலாளர் உட்பட அதிகாரிகள் கைது
கட்சியொன்றில் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்குவதற்காக இலஞ்சமாக கோடிக்கணக்கிலான பணத்தை பெற முற்பட்ட அதிகாரிகள் குழுவொன்றை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த கைது நடவடிக்கையானது, இன்று (14) பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்குவதற்காக 03 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற முற்பட்ட ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முறைப்பாடு
அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இன்று காலை கட்டுப் பணத்தை செலுத்திய பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க செய்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |