NPP அரசின் அமைச்சர்களுக்கு எதிராக ஒன்றுபடும் எதிர்க்கட்சிகள்
நாட்டில் அண்மைய தினங்களாகவே பேசுபொருளாக மாறியுள்ள அரசாங்கத்தின் அமைச்சர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, இவ்விடயம் தொடர்பில் வழங்கப்படும் அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பெயர் குறிப்பிட விரும்பாத உயரதிகாரி ஒருவர் தென்னிலங்கை ஊடகமொன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கை
இந்நிலையில், அரசாங்க அமைச்சர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் ஆராயுமாறு கோரி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு எதிர்வரும் நாட்களில் முறைப்பாடுகளை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பவும் எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இதேவேளை, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பலரும் அரசாங்க அமைச்சர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் கேள்வியெழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
