வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு 10 இலட்சம் இலஞ்சம்!

Northern Province of Sri Lanka Education
By Independent Writer Dec 20, 2025 11:20 AM GMT
Report
Courtesy: kapil

வவுனியா விபுலானந்த கல்லூரியில் இரசாயனவியல் பாட ஆசிரியரை நியமிக்காமல் இருப்பதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஒருவருக்கு அவர்களுக்கு 10 இலட்சம் பணம் பெற்றோர் ஓருவரால் வழங்கப்பட்டுள்ளதாக ஏழை தாய் ஒருவர் தன்னிடம் தெரிவித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற மன்ற உறுப்பினர் செ.திலகநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் கல்வியில் ஊழல் மலிந்துள்ளதால் ஏழை மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

யாழ். பொம்மைவெளி பகுதியில் கோர விபத்து - குடும்பப் பெண் பரிதாபமாக பலி

யாழ். பொம்மைவெளி பகுதியில் கோர விபத்து - குடும்பப் பெண் பரிதாபமாக பலி

சமுதாயத்தில் நடைபெறுகின்ற ஊழல்

எமது வட மாகாணமானது கல்வியில் பின்தங்கிய நிலையில் செல்லுகின்றது. உதாரணமாக சொல்லப் போனால் 2021 ஆம் ஆண்டு எமது வடக்கு மாகாணமானது இலங்கையில் காணப்படுகின்ற ஒன்பது மாகாணங்களில் ஏழாம் இடத்தில் இருந்தது.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு 10 இலட்சம் இலஞ்சம்! | Bribery Of The Provincial Ministry Of Education

2022 ஆம் ஆண்டும் அதே ஏழாம் இடத்தில் இருந்தது. 2023 ஆம் ஆண்டு எட்டாவது நிலைக்கு தள்ளப்பட்டது. 2024 ஆம் ஆண்டு ஒன்பதாவது நிலைக்கு தள்ளப்பட்டது.

இதுக்கு பல்வேறுபட்ட காரணங்களை அரச அதிகாரிகள் சாட்டுக்களாக சொல்லி தப்பித்துக் கொள்கின்றார்கள். ஆனால் அதனுடைய உண்மையான காரணத்தை மாணவ செல்வங்களினுடைய பெற்றோர்களோ, புத்திஜீவிகளோ அறிந்து கொள்ளவில்லை.

ஒரு எழுத்தறிவை கற்பிக்கின்ற கற்கின்ற ஒரு சமுதாயத்தில் ஊழல் என்பது எந்த விதத்திலும் மன்னிக்கப்பட முடியாத ஒன்றாகும். வடக்கு மாகாணத்திலே வாழுகின்ற மக்களின் எஞ்சியுள்ள ஒரே ஒரு சொத்து கல்வியாக காணப்படுகின்றது.

நாங்கள் கல்வியை வளர்க்காவிட்டால் எமது சமுதாயத்தில் மிஞ்சி இருக்க அதாவது எஞ்சி இருக்க ஒன்று கூட இல்லை. ஆகவே இந்த வடக்கு மாகாண கல்வி சமுதாயத்தில் நடைபெறுகின்ற ஊழல் தொடர்பாக நான் இங்கே தெரிவிக்க விரும்புகின்றேன்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியில் நான் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது ஒரு ஏழைத் தாய் என்னை மறித்து சொன்னார்.

சர்ச்சைக்குரிய 'ஒன்டன்செட்ரோன்' தடுப்பூசி தொடர்பில் இந்தியாவின் பதிலடி!

சர்ச்சைக்குரிய 'ஒன்டன்செட்ரோன்' தடுப்பூசி தொடர்பில் இந்தியாவின் பதிலடி!

பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரி

தனது மகள் பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் உயர் தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருப்பதாகவும் அந்த பாடசாலையில் புதிய வகுப்புக்கு உயர்தரம் ஆரம்பித்து நான்கு மாதங்கள் முடிவடைந்தும் இதுவரையும் இரசாயனவியல் பாடத்திற்கு ஆசிரியர்களை நியமிக்கவில்லை.

அதற்கான காரணத்தை அவர் சொல்லும் போது எனக்கு இதயமே நின்றுவிடும் போல் இருந்தது.

அவர் சொன்னார் உயர்தர பரீட்சையானது ஒரு போட்டி பரீட்சையாகும். சாதாரண ஏழை மாணவர்கள் கல்வி கற்கும் ஒரே இடம் பாடசாலையாகும்.

அந்த பாடசாலையில் திறமையான ஏழை மாணவர்கள் பலர் கல்வி கற்கின்றார்கள். அவர்கள் அந்த போட்டி பரீட்சையில் சித்தி அடையாமல் செய்வதற்காக சில வசதி படைத்த பெற்றோர் பணம் கொடுத்துள்ளார்கள்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அதாவது வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு 10 லட்சம் கொடுத்திருக்கின்றார் ஒரு மாணவியினுடைய தந்தை.

ஆகவே முதலாம் தவணைக்கு ஒரு போதும் இரசாயனவியல் பாடத்திற்கு ஆசிரியர் வரமாட்டார் என்று. அப்போது தான் நான் சிந்தித்தேன்.

கடந்த நான்கு ஐந்து மாதங்களாக  இந்த பாடசாலையில் இரசாயனவியல் பாடத்திற்கு ஆசிரியர் இல்லை. அதற்கு ஒரு மாற்றினையும் நான் தெரிவித்திருந்தேன்.

நொடிப்பொழுதில் தவிர்க்கப்பட்ட தொடருந்து விபத்து: ஒருவரின் வீரச் செயலால் காப்பற்றப்பட்ட உயிர்கள்

நொடிப்பொழுதில் தவிர்க்கப்பட்ட தொடருந்து விபத்து: ஒருவரின் வீரச் செயலால் காப்பற்றப்பட்ட உயிர்கள்

75 மாணவர்கள்

செட்டிக்குளத்தில் இருக்கின்ற அல்ஹாமியா என்னும் பாடசாலையில் ஒரே ஒரு மாணவர் தான் இருக்கின்றார். அங்கே ஒரு இரசாயனவியல் ஆசிரியர் இருக்கின்றார் .

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு 10 இலட்சம் இலஞ்சம்! | Bribery Of The Provincial Ministry Of Education

ஆனால் இந்த பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் 75 மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். அந்த பாடசாலைக்கு ஆசிரியரை நியமிக்காதற்குரிய காரணம் அந்த ஏழைத் தாய் சொல்லிய அதே காரணத்தை என்னால் உறுதிப்படுத்த முடிந்தது.

அது தொடர்பாக அந்த ஏழைத் தாய் கேட்டதற்கு இணங்க வவுனியா வலய கல்வி பணிப்பாளரிடம் நான் தொலைபேசியில் கேட்டபோது, அவர் சொன்னார் கல்வி அமைச்சின் செயலாளர் தான் அதை நியமிப்பது.

அது அவருடைய கடமை என்றும் மிக விரைவில் அந்த வெற்றிடம் நிரப்பப்படும் என்றும். ஆனால் நான் ஊகித்துக் கொண்டேன். முதலாவது தவணை மிக விரைவில் அதாவது முடிவடைந்து விட்டது.

நான் நினைக்கின்றேன் இரண்டாவது தவணைக்கும் அந்த வசதி படைத்த மாணவியின் தந்தை ஒரு மில்லியன் ரூபாய் வழங்கினால் இரண்டாவது தவணைக்கும் அங்கே ஆசிரியர் நியமிக்கப்பட மாட்டாது.

ஆகவே அதிகாரிகளே சிந்தியுங்கள். ஏழைகளின் செல்வம் கல்வி. பெண்களுக்கு பாதுகாப்பு கல்வி. வசதி படைத்தோரின் அணிகலன் தான் கல்வி.

ஆகவே ஏழைகளின் செல்வத்தில் விளையாடாதீர்கள். எமது அரசாங்கத்தில் தற்போது இருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் இங்கே இருக்கின்ற அரச அதிகாரிகளை விட திறமையான அறிவுள்ளவர்கள் தான் இருக்கின்றார்கள்.

ஆகவே எமது ஜனாதிபதியின் உடைய எண்ணக் கருவை செயற்படுத்துவதற்கு ஒரு போதும் நாங்கள் தயங்க மாட்டோம். ஏழை மாணவர்களுடைய வாழ்க்கையில் விளையாடாதீர்கள்.

உண்மையிலேயே நான் பார்த்தபோது அதாவது உயர்தரம் உயிரியல் கணித பிரிவுகளில் கற்கின்ற மாணவர்களுக்கு ஏதோ ஒரு பாட ஆசிரியரை திட்டமிட்டு வழங்காமல் விடுவதனால் உயர்தர பரீட்சையில் கடந்த காலங்களில் மூன்று பாடத்தில் ஒரு பாடம் அவர்கள் சித்தியடையாமல் இருப்பார்கள்.

அதாவது பரீட்சையில் சித்தி அடையாமல் இருக்கின்றார்கள். இதனால் அந்த மாணவர்கள் எதிர்வரும் காலத்தில் எந்த ஒரு போட்டி பரீட்சையிலோ அல்லது அரச உத்தியோகத்திலோ இணைவதற்கு வாய்ப்புக்கள் இழக்கப்படுகின்றன.

ஆகவே அன்பான அரச உத்தியோகத்தர்களே நீங்கள் கடந்த காலத்தில் தவறு செய்திருக்கலாம். நிதியிலே ஆசைப்பட்டிருக்கலாம். நீங்கள் வேறு எங்கே இருந்தாலும் தவறு செய்யுங்கள்.

ஆனால் கல்வியில் தவறு செய்ய வேண்டாம் என்று பணிவன்புடன் உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வளவு காலம் நீங்கள் தவறு செய்திருந்தால் இன்றில் இருந்தாவது நீங்கள் திருந்தி இந்த நாட்டுக்கும் எங்களுடைய சமுதாயத்திற்கும் ஏழை மக்களின் வரிப் பணத்திலிருந்து பெற்றுக் கொள்கின்ற சம்பளத்திற்கும் நேர்மையாக கடமையாற்றுங்கள் என்று நான் இந்த தருணத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026