ஒரு மாதத்தில் செயலிழந்த சமிச்சை விளக்குகள்: மக்கள் விசனம்
கடந்த மாதம் அமைச்சர் பந்துல குணவர்த்தனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட செங்கலடி வீதிக்கடவை சமிக்ஞை விளக்கு செயலிழந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு திருகோணாமலை பிரதான வீதியான செங்கலடி முச்சந்தியில் அமைந்துள்ள விளக்கே இவ்வாறு செயலிழந்துள்ளது.
பதிலை வீதிக்கும் செல்லக்கூடிய முச்சந்தியான செங்கலடி சந்தியில் உள்ள சமிக்ஞை விளக்கே இவ்வாறு செயலிழந்துள்ளது.
மக்கள் விசனம்
கடந்த செப்டம்பர் மாதம் முதலாம் திகதி திறந்து வைக்கப்பட்ட வீதிக்கடவை விளக்கு ஒரு மாதத்திலே செயல் இழந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பதுளை வீதியில் உள்ள கிராமங்களில் இருந்து அதிகளவான மக்கள் செங்கலடிநகர் பகுதியில் தங்களது வியாபார நடவடிக்கைகளையும் பொருட்கள் கொள்வனவும் செய்கின்ற பிரதான இடமாக காணப்படுகின்றது.
குறித்த வீதிக்கடவை விளக்கு தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து விபத்துக்களில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.