புடினின் மகளுக்கு எதிராக தடைகைளை அறிவித்தது பிரிட்டன்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மகள்கள் மீது பிரிட்டன் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
அதாவது, புடினின் இரண்டு மகள்களான கதேரினா டிகோனோவா மற்றும் மரியா வொரோன்ட்சொவா ஆகியோருக்கு எதிராக பயணம் செய்ய தடை, அவர்களின் சொத்துக்களை முடக்குதல் போன்ற நடவடிக்கைகள் அடங்கிய பொருளாதர தடைகளை பிரிட்டன் விதித்துள்ளது.
அதேபோல், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லவ்ரோவ் மகளுக்கு எதிராகவும் இத்தகைய தடையை பிரிட்டன் விதித்துள்ளது.
இது குறித்து பிரிட்டன் கூறுகையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் தற்போது வரை 1,200 ரஷ்யர்கள் மற்றும் ரஷ்யாவுடன் தொடர்புடைய 16 வங்கிகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்காவும் இதேபோன்ற நடவடிக்கையை புடின் மகள்களுக்கு எதிராக மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.