பிரித்தானிய கல்வியில் அதிரடி மாற்றம் - ரிஷி சுனக்கின் அடுத்த கட்ட நகர்வு
பிரித்தானியாவில் 18 வயது வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் கணித பாடம் கட்டாயம் என அறிவித்துள்ளார் அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக்.
பிரித்தானியா கல்வித் தரம் உலக பிரசித்தி பெற்றது. கடந்த காலங்களில் பள்ளி முதல் கல்லூரி வரை பல்வேறு நிலைகளிலும் அங்கு கல்விக்காக அந்நாட்டுக்கு செல்வோர் அதிகம்.
அண்மைக் காலமாக இந்த நிலை மாறி வருகிறது. பெரியவர்கள் மத்தியில் அடிப்படை கல்வி தொடர்பான இடர்பாடுகள் அதிகம் தென்படுவது தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.
ஆய்வு முடிவுகள்
குறிப்பாக சுமார் 80 இலட்சம் பிரித்தானியர்கள் மத்தியில் பொதுவான கணக்கு பகுப்பாய்வு திறன்கள், ஆரம்பப்பள்ளி மாணவருக்கான அளவிலே இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் 16 - 19 வயதிலான பிரித்தானிய மாணவர்களில் சரிபாதி எண்ணிக்கையில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து படிப்பதை தவிர்த்து வருகின்றனர்.
இவற்றை மேற்கோள்காட்டியே புதிய அறிவிப்பினை பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்டுள்ளார்.
கணிதம் கட்டாயமாக இடம்பெறும்
இதன்படி பள்ளிகளில் கணித பாடங்கள் மற்றும் அதன் திறன்களை மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் 18 வயது வரையிலான மாணவர்களின் பாடங்களில் கணிதம் கட்டாயமாக இடம்பெறும் எனவும் இந்த புதிய ஏற்பாட்டுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கோரியுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
