இலங்கையை பின்பற்றும் பிரித்தானியா..! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் ரிஷி சுனக்
இலங்கை
பிரித்தானியா சட்டவிரோதமான போராட்டங்களுக்கு எதிராக இலங்கையின் பாணியிலான ஒடுக்குமுறையை நடைமுறைபடுத்தவுள்ளது.
சட்டவிரோத போராட்டங்களில் ஈடுபடும் சுயநல சிறுபான்மையினரால் மக்கள் தங்கள் வாழ்க்கையை சீர்குலைப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்(Rishi Sunak) கூறியுள்ளார்.
ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் போன்ற சில சுற்றுச்சூழல் எதிர்ப்புக் குழுக்கள் பயன்படுத்தும் தந்திரோபாயங்களைப் பற்றி விவாதிக்க உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேன் காவல்துறை தலைமைக் காவலர்களைச் சந்தித்தார்.
முழு பலத்தையும் உணர வேண்டும்
சட்டத்தை மீறுபவர்கள் அதன் முழு பலத்தையும் உணர வேண்டும் என்பதே எனது கருத்து என்று பிரதமர் கூறினார்.
காவல்துறைக்கு தனது ஆதரவு இருப்பதாகக் கூறினார். சட்டவிரோதப் போராட்டங்களைத் தடுக்க காவல்துறையினருக்கு ஏற்கனவே புதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், சாதாரண குடும்பங்களுக்கு ஏற்படும் துன்பங்கள் மற்றும் இடையூறுகளை முடிவுக்குக் கொண்டு வர உறுதியுடன் செயல்பட தனது முழு ஆதரவும் இருக்கும் என்றும் பிரதமர் கூறினார்.
இதனிடையே, செப்டம்பரில், இலங்கையில் போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையைப் பயன்படுத்துவதில் பிரித்தானியா வருத்தம் தெரிவித்தது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவாவில் உள்ள பிரித்தானியா பிரதிநிதிகள் சபையின் 51வது அமர்வில், பொருளாதார நிலைமைக்கு எதிராக ஒன்றிணைந்து, இலங்கை மக்கள் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றுக்கான உரிமைகளைப் பயன்படுத்தினர்.
எதிர்ப்பாளர்களுக்கு எதிராக வன்முறை
“இதற்கு பதிலடியாக, எதிர்ப்பாளர்களுக்கு எதிராக வன்முறை பயன்படுத்தப்பட்டதில் நாங்கள் திகைக்கிறோம். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.
மேலும் சட்டத்தை சீர்திருத்தம் செய்ய தொடர்ந்து அழைப்பு விடுக்கிறோம், ”என்று ஜெனீவாவில் உள்ள பிரித்தானியா பிரதிநிதிகள் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.