அணு ஆயுத சோதனைக்கு இறங்கிய பிரித்தானியா: முன்கூட்டியே எச்சரித்த அமெரிக்கா
பிரித்தானியா அணு ஆயுத சோதனையொன்றை மேற்கொள்ள ஆயத்தமாகிக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த சோதனைக்காக பிரித்தானியாவின் HMS Vanguard என்னும் நீர்மூழ்கிக் கப்பல் தயாராகிவருவதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
6,000 மைல்கள்
அதன்போது இந்தக் கப்பல், அமெரிக்காவின் கிழக்குக் கரையிலிருந்து Trident 2 என்னும் ஏவுகணையை ஏவ இருக்கின்றது.
ஏவப்படும் ஏவுகணையில் அணு ஆயுதங்கள் எதுவும் காணப்படாது என்றும் அது 6,000 மைல்கள் பயணித்து பிரேசிலுக்கும் மேற்கு ஆபிரிக்காவுக்கும் நடுவே கடலில் விழுமெனவும் தெரிவிக்கப்படுகிறது
முன்கூட்டியே எச்சரிக்கை
இந்நிலையில், ஏவுகணை சோதனை தொடர்பில் அமெரிக்க பாதுகாப்பு தொடர்பிலான அமைப்புகளில் ஒன்றான The US National Geospatial Intelligence Agency என்னும் அமைப்பு, அப்பகுதியில் பயணிக்கும் கப்பல்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை, 2016ஆம் ஆண்டு, இதேபோல ஒரு அணு ஆயுத சோதனையை பிரித்தானியா நடத்தியதாகவும் அது தோல்வில் முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |