பிரித்தானியாவில் உள்ள இலங்கையர்களின் விசா பரிசீலனையால் பாரிய சிக்கல்
கடந்த இரண்டு தசாப்தங்களில் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 31,000 புகலிட உரிமை மற்றும் அகதி அந்தஸ்துகளை பிரித்தானிய உள்துறை அமைச்சகம் (Home Office) மீண்டும் ஆராய வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது.
இலங்கையின் உள்நாட்டுப் போர் (1983–2009) காரணமாக வந்த பல கோரிக்கைகள், மோதல் பகுதியில் ஆவணங்களை அணுகுவதில் இருந்த சிரமங்கள் காரணமாக மிகக் குறைந்த சரிபார்ப்புடனேயே ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தற்போது இலங்கையில் காவல்துறை, நீதிமன்றம், பொது ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படுவதால், இலங்கை அரசு இங்கிலாந்துடன் மேம்பட்ட தகவல் பகிர்வை முன்மொழிந்துள்ளது.
இதன்மூலம் விண்ணப்பதாரர்களின் பின்னணியை பின்னோக்கி சரிபார்க்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
புகலிட உரிமைகளின் பின்னணி
சுமார் 31,000 இலங்கைத் தமிழர்கள் இங்கிலாந்தில் புகலிட உரிமை அல்லது அகதி அந்தஸ்து பெற்றதாக ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.
பலர் பின்னர் பிரித்தானிய குடியுரிமை பெற்றதாக கூறப்படுகிறது.

இதன்படி பிரித்தானியாவில் பிறந்த அவர்களது குழந்தைகள் இப்போது இரண்டாம் தலைமுறையாக சமூகத்தில் ஒருங்கிணைந்துள்ளனர்.
போர் மற்றும் போருக்குப் பிந்தைய காலத்தில் இலங்கை ஆவணங்கள் முழுமையடையாததாலும் அணுக முடியாததாலும் உண்மைத்தன்மை சரிபார்ப்பு “மிகவும் கடினம்” என பிரித்தானிய ஆய்வு அறிக்கைகள் விவரிக்கின்றன.
எனவே விண்ணப்பதாரர்களின் சொந்தக் பின்னணியை பெரிதும் நம்பி அனுமதி வழங்கப்பட்டதாக மேற்படி தகவல்கள் விளக்குகின்றன.
புகலிட விண்ணப்பங்கள்
2021 முதல் பிரித்தானியாவில் 4 இலட்சத்துக்கும் மேல் புகலிட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2011–2015 காலத்தைவிட இரு மடங்காக இவை பதிவாகியுள்ளது. ஆனால் போருக்குப் பிந்தைய நிலைமை மேம்பட்டதால் தற்போது இலங்கையர்களுக்கு அனுமதி விகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் தென்கிழக்கு பிரித்தானியாவில் வசிக்கும் ஒரு இலங்கையர், இலங்கையில் முன்னர் குற்றப் பதிவு இருந்தும் அதை மறைத்து தஞ்ச உரிமை பெற்றிருப்பது தொடர்பில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் சில அரசியல்வாதிகள் இதை “கணினியில் உள்ள ஆழமான குறைபாடுகளின் அறிகுறி” என விவாதித்திருந்தனர். இதன்படி இலங்கையின் டிஜிட்டல் ஆவணங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான தகவல் பகிர்வு ஒப்பந்தம் மூலம் மோசடி அல்லது தகுதியின்மையை கண்டறிய முடியும் என நம்பப்படுகிறது.
இதை ஆதரிப்போர் “பொதுவாக அனைவரையும் இரத்து செய்யாமல், போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களை மட்டும் இலக்காகக் கொண்டால் நியாயமாக இருக்கும் என கூறியுள்ளனர்.
பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சியினர் மற்றும் குடியேற்றக் கட்டுப்பாட்டு ஆதரவாளர்கள் இதை பெரிதுபடுத்தி, தற்போதைய லேபர் அரசின் UV-ஐக் குறைப்பு (18% குறைந்துள்ளது) மற்றும் உயர் அனுமதி விகிதங்களை விமர்சிக்கின்றனர்.
ஆனால் நவம்பர் 24, 2025 வரை உள்துறை அமைச்சகம் எந்த முறையான மறு ஆய்வையும் அறிவிக்கவில்லை.
870 மில்லியன் யூரோ செலவு
எனினும் தற்போது அது தொடர்பிலான விவாதம் மேலோங்கியள்ளதால், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உண்மையில் பிரச்சினை உள்ளவர்களுக்கு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டு நாடு கடத்தப்படலாம்.
நீண்டகாலமாக வாழ்பவர்கள், குழந்தைகளுடனான குடும்பங்கள் பிரிக்கப்படும் அபாயம் காணப்படலாம்.
இது புகலிட கோரிக்கையாளர்களுக்கு சவாலாக மாறினாலும், அரசின் “ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டை மீட்டெடுத்தல்” கொள்கையுடன் ஒத்துப்போகிறது என பிரித்தானிய தரப்புகளால் கூறப்படுகிறது.

31,000 வழக்குகளை மறு ஆய்வு செய்வது 870 மில்லியன் யூரோ செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இது மேலும் மனித உரிமை கவலைகளையும் எழுப்பியுள்ளது. அகதி அமைப்புகள் இதை “நடைமுறைக்கு ஒவ்வாதது, கொடூரமானது” என்று எச்சரிக்கின்றன.
மேலும், போர்காலத்தில் பல உண்மையான பாதிப்புகள் இருந்தன என்று அவை வலியுறுத்துகின்றன.
நவம்பர் 21, 2025 அறிவிக்கப்பட்ட இங்கிலாந்தின் புதிய புகலிட சீர்திருத்தங்களுடன் (தற்காலிக அந்தஸ்து, வேலை ஊக்குவிப்பு, ஒத்துழையாத நாடுகளுக்கு தண்டனை) இது ஒத்துப்போவதாக காணப்படுகிறது.
உள்துறை அமைச்சகம் 74 மில்லியன் யூரோ தங்குமிட செலவைக் குறைத்துள்ள போதிலும், விமர்சகர்கள் இது போன்ற ஆழமான சரிபார்ப்பே பொதுமக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்கும் என்று வாதிடுகின்றனர்.
இதுவரை எந்த உத்தியோகபூர்வ நடவடிக்கையும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் இது வரலாற்று அகதிகளுக்கான இரக்கம் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுத் தேவைக்கு இடையிலான முரண்பாட்டை வெளிப்படுத்தும் என ஆர்வளர்கள் கருதுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |