இலங்கைக்கு சுற்றுலா பயணம் வந்த பிரித்தானிய பிரஜை திடீர் மரணம்
Sri Lanka Tourism
Sri Lanka
United Kingdom
Death
By Sumithiran
இலங்கைக்கு சுற்றுலா பயணம் வந்தநிலையில் பேராதனை தாவரவியல் பூங்காவை பார்வையிட வந்த, பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.
உயிரிழந்த பிரித்தானிய பிரஜை 69 வயதுடைய பெனடிக்ட்டில் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பேராதனை தாவரவியல் பூங்கா
குறித்த சுற்றுலாப் பயணி மற்றுமொரு பெண்ணுடன் நேற்று (05) கண்டிக்கு வந்து காலை 10.30 மணியளவில் பேராதனை தாவரவியல் பூங்காவிற்குச் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக உடனடியாக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
காவல்துறையின் அறிவிப்பு
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், உயிரிழந்துள்ளதாக பேராதனை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.அவர் உயிரிழந்தமை தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா

மரண அறிவித்தல்