போருக்கு செல்லவிருக்கும் பிரித்தானிய மக்கள்: விடுக்கப்படவுள்ள எச்சரிக்கை
போர் ஒன்று ஏற்படுமானால் பிரித்தானிய பொதுமக்கள் போருக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுமென பிரித்தானிய முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஒருவர் அறிவிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றைய தினம், பிரித்தானிய படைகளின் தலைவரான General Sir Patrick Saunders, பொதுமக்களுக்கு உரை ஒன்றை ஆற்றவிருப்பதாக பிரித்தானிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த உரையில் அவர் பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை கொடுக்க இருப்பதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
பிரித்தானிய படைகளின் தலைவர்
அதன்போது, அவர் பிரித்தானிய இராணுவம் மிகவும் சிறியதாக இருப்பதாகவும் போர் ஒன்று ஏற்படுமானால் பொதுமக்கள் போருக்குச் செல்ல வேண்டியிருக்கும், என்று எச்சரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரித்தானிய முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரான Tobias Ellwood, பிரித்தானிய படைகளின் தலைவரின் கூற்றை ஆதரித்து,கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.
போர்
“பிரித்தானிய படைகளின் தலைவரான சர் பாட்ரிக் கூறுவதை கவனிக்கவேண்டும், அவர் புத்தியும் யுக்தியும் கொண்டவர்களில் ஒருவர்.அவர் சொல்வதுபோலவே, எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்னும் ஒரு சூழலில் நாம் வாழ்ந்துவருகிறோம்.
பனிப்போர்க் காலத்துக்குப் பின் நமது ராணுவம் முன்னிருந்த நிலையில் இல்லை. அது மிகவும் சுருங்கியிருக்கிறது. ஆகவே, நாம் நமது ராணுவத்தை போருக்கு தயார் செய்யவேண்டும்” என்று Tobias Ellwood கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |