ஈரானிடம் அணு ஆயுதம்! மன்னர் சார்லஸின் நிலைப்பாட்டை அறிவித்த ட்ரம்ப்
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது என்பதில் பிரித்தானிய மன்னர் சார்லஸ் தன்னை விடவும் உறுதியாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய மன்னர் சார்லஸை கௌ
ரவிக்கும் வகையில் வெள்ளை மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராவுணவு விருந்தின் போது, ட்ரம்ப ஈரான் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியட்டுள்ளார்.
பதில் அளிக்கான மன்னர் சார்லஸ்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஈரான் மீதான போரில் பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என ட்ரம்ப் ஏற்கனவே விமர்சித்து வந்த நிலையில் இக்கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

Image Credit: Politico
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கக் கூடாது என்பதில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் நீண்டகாலமாக ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், ட்ரம்பின் இந்தக் கருத்துக்கள் குறித்து மன்னர் சார்லஸ் நேரடியான பதில்கள் எதனையும் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
மன்னரின் நிலைப்பாடு
பிரித்தானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளராக மன்னர் செயல்பட முடியாது என்பதால், அவர் தனது உரையில் ஈரான் அல்லது போர் குறித்து எதனையும் குறிப்பிடவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

Image Credit: AOL.com
முன்னதாக அமெரிக்க காங்கிரஸில் ஆற்றிய உரையில், அவர் உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டியதன் அவசியம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட கொள்கைகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்து மட்டுமே பேசியிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |