ஆவியாக உலவும் பிரித்தானிய மகாராணி..! ராஜ அரண்மனையில் அதிர்ச்சி சம்பவம்
ஆவிகள்
கொவிட் காலகட்டத்தின்போது, பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத், பக்கிங்காம் மாளிகையிலிருந்து விண்ட்சர் மாளிகைக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்துவிட்டார்.
அங்கு ஆவிகள் நடமாட்டம் இருப்பதை தானும் தனது சகோதரியான இளவரசி மார்கரட்டும் உணர்ந்ததாக பிரித்தானிய மகாராணியாரே தெரிவித்துள்ளார்.
மாளிகையிலுள்ள நூலகத்துக்குச் சென்றால், அங்கு முதலாம் எலிசபெத் மகாராணியின் காலடி சத்தம் கேட்குமாம்.
ஏக்கத்துடன் பார்க்கும் ஒரு உருவம்
அதைத் தொடர்ந்து திடீரென அவரது உருவம் தெரியுமாம். அதேபோல, மன்னர் மூன்றாம் ஜார்ஜின் ஆவியைப் பார்க்கவேண்டும் என்றால், நூலகத்துக்குக் கீழே இருக்கும் அறைக்குச் செல்லவேண்டுமாம்.
தனது வாழ்வின் இறுதி நாட்களில் மோசமாக மன நலம் பாதிக்கப்பட்டிருந்த மன்னர் மூன்றாம் ஜார்ஜ் அங்குதான் அடைத்துவைக்கப்பட்டிருந்தாராம்.
அந்த அறையின் ஜன்னல் வழியாக ஏக்கத்துடன் பார்க்கும் ஒரு உருவத்தைப் பார்த்துள்ளதாக பலரும் தெரிவித்துள்ளார்கள்.
மன்னர் மூன்றாம் ஜார்ஜ்
இதைவிட சுவாரஸ்யம் என்னவென்றால், ஒருமுறை, மாளிகைக்கு வெளியே அணிவகுப்பு நடத்திக்கொண்டிருந்த தளபதி ஒருவர் அந்த அறையின் ஜன்னலைத் திரும்பிப் பார்க்க, அங்கு மன்னர் மூன்றாம் ஜார்ஜ் நின்று அணிவகுப்பை கவனித்துக்கொண்டிருப்பதைக் கண்டாராம்.
உடனடியாக, தன்னை மறந்து, தனது வழக்கப்படியே ‘வலது புறம் பாருங்கள்’ என வீரர்களுக்கு உத்தரவிட, வீரர்களும் சட்டென திரும்பி மன்னருக்கு சல்யூட் வைக்க, பதிலுக்கு மன்னரின் ஆவியும் வீரர்களுக்கு பதில் சல்யூட் வைத்ததாம்.
விடயம் என்னென்றால், இந்த மாளிகைக்கு அருகில்தான் இளவரசர் வில்லியம் குடும்பத்துடன் வாழ்கிறார்.