இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட பிரித்தானிய பெண்ணின் கடவுச்சீட்டு: வெளிவரும் பின்னணி
இலங்கையில் இடம்பெற்ற போராட்ட காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பிரித்தானிய பெண்ணின் கடவுச்சீட்டை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கொழும்பில் இடம்பெற்ற போராட்டங்கள் குறித்து சமூக ஊடகங்களில் குறித்த பிரித்தானிய பெண் குரல் கொடுத்துள்ளார் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது, இதனால் அவரது கடவுச்சீட்டை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
ஸ்காட்லாந்தின் செயின்ட் ஆண்ட்ரூஸைச் சேர்ந்த 34 வயதான கெய்லீ ஃப்ரேசர் (Kayleigh Fraser) கடந்த செவ்வாய்க்கிழமை (02) அவரது வீட்டு வாசலுக்கு ஆறு குடிவரவு அதிகாரிகள் வந்து விசா நிபந்தனைகளை மீறியதாகக் கூறி தனது கடவுச்சீட்டை பறிமுதல் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து ஃப்ரேசர் வெளியிட்ட காணொளி
This is Kayleigh Fraser- a Scottish national in Sri Lanka
— Deena Tissera (@deenatissera) August 4, 2022
She is a social media activist shedding light on the protests, state of emergency, & human right violations in Sri Lanka.
Her British passport has been forcefully seized by Sri Lankan authorities with no given reason pic.twitter.com/2X7whmnWl8
அதிகாரிகள், தனது கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு கேட்டதாகவும், இல்லையெனில் தன்னை கைது செய்வதாக எச்சரித்ததாகவும், அவரது ஆவணங்கள் திருப்பி கொடுப்பதற்கு முன் விசாரணைக்காக 7 நாட்கள் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.
அத்துடன், இந்த சம்பவத்திற்கு முதல் நாள் , தனக்கு கடவுச்சீட்டை வழங்கிய நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு ஊழியரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதில், அதிகாரிகள் தன்னை விசாரித்து வருவதால், உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
மோதல் குறித்து ஃப்ரேசர்
குடிவரவு அதிகாரிகளுடனான தனது மோதலைப் பற்றி செய்தி நிறுவனத்திடம் பேசிய ஃப்ரேசர், “அவர்கள் என்னை தெருவில் வைத்து என் வீட்டிற்கு வெளியே சுமார் 40 நிமிடங்கள் இருந்தனர், ஆனால் நான் என்ன தவறு செய்தேன் என்று அவர்களால் சொல்ல முடியவில்லை.
எனது விசாவின் விதிமுறைகளை நான் மீறினேன் என்று அவர்கள் தொடர்ந்து கூறினர், ஆனால் அவர்கள் இறுதியாக எனது கடவுச்சீட்டை பிடிக்கும் வரை நான் என்ன விசாவில் இருக்கிறேன் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. நான் பாதுகாப்பாக உணரவில்லை" என்று கூறியுள்ளார்
உதவிய வழக்கறிஞர்
மேலும், அவர்களில் இருவர் தனது கடவுச்சீட்டைப் பெறுவதற்காக தனது வீட்டிற்குள் நுழைய முயன்றதாகக் கூறியதை அடுத்து, அதிகாரிகளுடனான தனது உரையாடலை ஃப்ரேசர் காணொளி பதிவு செய்தார்.
இந்த காணொளியை தனது சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டதிலிருந்து, வினிவிதா அறக்கட்டளையின் பொதுச் செயலாளரான செயற்பாட்டாளர் வழக்கறிஞர் நாகாநந்த கொடிதுவக்கு தனது வழக்குக்கு உதவுவதற்காக தன்னுடன் தொடர்பில் இருப்பதாக பிரேசர் குறிப்பிட்டுள்ளார்.