இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல் : உருக்குலைந்து போன பிரிட்டன் குடும்பம்
United Kingdom
Israel-Hamas War
By Vanan
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பின் காணாமல் போனவர்களில் இரண்டு பிரித்தானிய சகோதரிகளும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
16 வயதான நொயா மற்றும் 13 வயதான யாஹெல் ஆகியோரின் குடும்பத்தினர் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தாய் உயிரிழப்பு
இங்கிலாந்தில் பிறந்த அவர்களின் தாய் லியானே ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களின் தந்தை ஏலியையும் காணவில்லை என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இந்தத் தாக்குதல்களில் ஆறு பிரித்தானிய குடிமக்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 10 பேரைக் காணவில்லை என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள 199 பேரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் ரிஷி சுனக் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி