பெல்ஜிய தலைநகரில் இருவர் சுட்டுக் கொலை
Belgium
By Vanan
பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இன்று(16) மாலை 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர்கள் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடவுளின் பெயரால் தாக்குதல்
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், அரபு பேசும் நபர் ஒருவர் கடவுளின் பெயரால் இந்தத் தாக்குதலை நடத்தியதாக கூறுகிறார்.
இந்தத் தாக்குதலின் காட்சிகள் காவல்துறையினரால் சரிபார்க்கப்பட்டு வருவதுடன், விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச வழக்கறிஞர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்திய துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பிச் சென்றதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி