பிரித்தானியா செல்வதற்கான போலிச் சான்றிதழ்: விமான நிலையத்திலேயே சிக்கிய இளைஞன்
பிரித்தானியா செல்வதற்கு விசா பெறுவதற்காக மோசடி வேலை ஒன்றைச் செய்த இந்தியர் ஒருவரை காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம், இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த பட்டேல் (Umang Patel 29) என்பவர், பிரித்தானியா செல்வதற்காக மும்பை விமான நிலையம் சென்றுள்ளார்.
பிரித்தானிய விசா பெற்றிருந்த அவருடைய சான்றிதழ்களைப் பரிசோதித்த விமான நிலைய அதிகாரிகளுக்கு, அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
போலிச் சான்றிதழ்
அவர், B.Tech சான்றிதழ் வைத்திருந்திருந்த போதும் விமான நிலைய அதிகாரிகளின் கேள்விகளுக்கு அவரால் திருப்திகரமான பதிலளிக்கமுடியவில்லை. ஆகவே, அதிகாரிகள் அவரை தனியாக அழைத்துச் சென்று விசாரித்திருக்கிறார்கள்.
விசாரணையில், தனது B.Tech சான்றிதழ் போலியானது என்பதையும், தான் சூரத்திலுள்ள ஏஜண்ட் ஒருவர் மூலம் அந்த சான்றிதழைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த போலி சான்றிதழைப் பயன்படுத்தியே, தான் பிரித்தானிய விசா பெற்றதாகவும் பட்டேல் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது மோசடி வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.