மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபசார விடுதிகள் - 05 பெண்கள் கைது
மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபசார விடுதிகளை சுற்றிவளைத்த கிரிபத்கொட காவல்துறையினர், முகாமையாளர்களுடன் 5 பெண்களை கடந்த 17ஆம் திகதி இரவு கைது செய்துள்ளனர்.
மஹர நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய காவல்துறையினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மசாஜ் நிலையங்கள்

மசாஜ் நிலையங்களில் ஒன்று கண்டி வீதியின் கலா சந்தியிலும் மற்றைய மசாஜ் நிலையம் மாகொல வீதி பகுதியிலும் இருந்த நிலையில் சோதனையிடப்பட்டுள்ளது.
கலா சந்தியில் உள்ள மசாஜ் நிலையத்தில் மூன்று பெண்களுடன் முகாமையாளர் ஒருவரும் மாகொல வீதி பகுதியில் உள்ள மசாஜ் நிலையத்தில் இரண்டு பெண்களுடன் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான பெண்கள்

அம்பாறை, களனி மற்றும் கடவத்தை பிரதேசங்களில் வசிக்கும் 22 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களே கைது செய்யப்பட்டவர்களாவர்.
முகாமையாளர் ஒருவர் இரத்தினபுரி பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதான ஒருவர் என்பதுடன்,மற்றைய முகாமையாளர் சியம்பலாண்டுவ பிரதேசத்தை சேர்ந்த 28 வயதானவர் ஆவார்.
கைது செய்யப்பட்டவர்கள் மஹர நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் அதிரடி

கிரிபத்கொட காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் மஞ்சுள டி சில்வா, குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதி காவல் பரிசோதகர் மதுரங்க கமகே, பொ. ரத்நாயக்க (90071), நந்தசிறி (93652), தேவிடு (100478), ஹஸ்மின் (98467), மகளிர் போ கோ. அதிகாரிகள் செவ்வந்தி (10588) மற்றும் சஞ்சலா (12125) ஆகியோர் அடங்கிய காவல்துறை குழு இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டது.