மின்னல் தாக்கியதில் சகோதரர்கள் இருவர் பரிதாப மரணம்
Sri Lanka Police
Matale
Sri Lanka
By Sathangani
மாத்தளை - இரத்தோட்டை பகுதியில் வீடொன்றில் இருந்த சகோதரனும் சகோதரியும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இரத்தோட்டை - வெல்காலயாய பிரதேசத்தில் நேற்று (29) மாலை பெய்த மழையுடன் மின்னல் தாக்கியதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்
இரத்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனுமே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
இதேவேளை அவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சடலங்கள் இரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த அனர்த்தம் தொடர்பாக இரத்தோட்ட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |
மரண அறிவித்தல்