லண்டனில் 2026 ஆம் ஆண்டுக்கான குடும்ப வணிக விருதை வென்ற ஈழத்தமிழர்களின் BTM நிறுவனம்
ஈழத்ததமிழ் பூர்வீக பின்னணியைக் கொண்ட சகோதர தொழிலதிபர்களின் நிறுவனமான பிரிஎம் (BTM) சர்வதேச நிறுவனம் லண்டனில் 2026 ஆம் ஆண்டுக்கான குடும்ப வணிக விருதை வென்றுள்ளது.
பதப்படுத்தப்பட்ட கொள்கலன் மீன்களை ஐரோப்பாவில் சந்தைப்படுத்தும் இந்த சர்வதேச நிறுவனம் லண்டனை தலைமையகமாக கொண்டு இயங்குகின்றது.
லண்டனில் நடைபெற்ற நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளமை புலம்பெயர் தமிழ் சமூகத்தின்; வணிக ரீதியான வெற்றிக்கு புதிய ஆதாரமாக அமைந்துள்ளது.
குடும்ப வணிக முகாமைத்துவம்
லண்டன் மற்றும் அதன் சுற்றாடல் பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான போட்டி நிறுவனங்களுக்கு மத்தியில், பிரிஎம் நிறுவனத்துக்கு அதன் நிலையான வளர்ச்சி மற்றும் குடும்ப வணிக முகாமைத்துவத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
கடந்த சில ஆண்டுகளில் பிரிஎம் நிறுவனம் காட்டிய அபரிமிதமான வளர்ச்சி, சந்தை விரிவாக்கம் மற்றும் வாடிக்கையாளர் சேவைத் தரம் ஆகியனவே இந்த விருது தெரிவுக்கு முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

குடும்ப உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த உழைப்பால் ஒரு வணிகத்தை வெற்றிகரமாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் இந்த நிறுவனம் ஒரு முன்னோடியாகத் திகழ்கின்றது.
சமீப காலமாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் வணிக நிறுவனங்கள் சர்வதேச அளவில் இத்தகைய உயரிய விருதுகளை வெல்வது, உலகத் தமிழர்களிடையே பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்தநிலையில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக BTM தர அடையாளத்தை நிறுவிய பிறகு, எங்களின் பதப்படுத்தப்பட்ட மீன் வகைகளுக்காக இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் நன்கு அறியப்பட்ட தர அடையாளமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது பெருமைக்குரிய விடயம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
