கனடாவில் இடம்பெறவுள்ள செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும் மாநாடு

Sri Lankan Tamils Canada
By Kajinthan May 03, 2026 03:51 AM GMT
Report

"செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்" எனும் கருப்பொருளில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு ஒன்று எதிர்வரும் ஒக்ரோபர் 10 ஆம் திகமுதல் 18 ஆம் திகதி வரை கனடா ரொரண்டோ மாநகரில் நடைபெற உள்ளதாக குறித்த நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

இம்மாநாடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், தலைமையில் யாழில் ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது கருத்து தெரிவிக்கையில்,

தேரர்களின் தாய்லாந்து போதைப்பொருள் கடத்தல்! விசாரணையில் கண்டறியப்பட்ட முக்கிய சூத்திரதாரி

தேரர்களின் தாய்லாந்து போதைப்பொருள் கடத்தல்! விசாரணையில் கண்டறியப்பட்ட முக்கிய சூத்திரதாரி

வடகிழக்குப் பொருண்மிய மேம்பாடு

“குறித்த மாநாடு, உலகம் முழுவதுமுள்ள அறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்துச் செம்மொழித் தமிழ், செய்யறிவு, மெய்ப் பொருளியல், பண்பாடு, புலம்பெயர் வாழ்வு, உலகமயமாதல், வரலாறு, பொருண்மிய மேம்பாடு ஆகிய துறைகளின் இணையிசைவுகளை ஆராய்வதற்கான அறிவியற் தளமாக அமையவுள்ளது.

கனடாவில் இடம்பெறவுள்ள செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும் மாநாடு | Tamilum Tamilarum Maanadu Canada

மேலும், தமிழ் அறிவியல் மரபுகளின் வரலாற்று ஆழத்தையும் இன்றைய உலகில் அவற்றின் சமகாலப் பொருத்தத்தையும் வெளிப்படுத்தும் பல்துறை உரையாடல்களை ஊக்குவிப்பதே இம்மாநாட்டின் நோக்கமாகும் என்றும் குறித்த ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய - தமிழும் செய்யறிவும், மெய்ப்பொருளியலும் பண்பாடும், பொருளியல் சிந்தனையும் வாழ்வியலும், தமிழர் வரலாறும் வாழ்வியலும், வடகிழக்குப் பொருண்மிய மேம்பாடு உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வுகளை கோரியுள்ளதுடன் அவை தமிழ் அல்லது ஆங்கிலம் மொழியில் அமையலாம் என்று தெரிவித்திருந்தனர்.

அத்துடன் குறித்த ஆய்வுச் சுருக்கம் 250-300 சொற்களில் அமைதல் வேண்டும் என்றும் அதைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 2026.05.25 என்றும் தெரிவித்திருந்தனர்.

மேலும் அளிக்கப்படும் அனைத்து ஆய்வுச் சுருக்கங்களும் மாநாட்டு ஆய்வுக் குழுவினரால் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, இந்த ஆய்வின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் ஆய்வுச் சுருக்கங்களை எழுதியோர் ஆய்வுக் கட்டுரை எழுதுமாறு வேண்டப்படுவர்.

மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம்: அநுரவின் மே தின எச்சரிக்கைக்கு நாமல் பதிலடி

மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம்: அநுரவின் மே தின எச்சரிக்கைக்கு நாமல் பதிலடி

ஆய்வுச் சுருக்கத் தேர்வு

அனைத்து ஆய்வாளர்களுக்கும் அவரவர் ஆய்வுச் சுருக்கத் தேர்வு பற்றிய முடிவு 2026.06.30 ஆம் நாளுக்குள் அறிவிக்கப்படும்.

முழுமையான ஆய்வுக் கட்டுரைகள் 3000 சொற்களுக்கு மிகாமலும் ஒருங்குறி எழுத்துரு 12 அளவிலும் அமைதல் வேண்டும்.

இக்கட்டுரைகளை 2026.08.31 ஆம் நாளுக்கு முன் கிடைக்கக் கூடியதாக மேற்குறிப்பிட்ட இணைய தளத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்திருந்ததுடன் தெரிவு செய்யப்படும் இலங்கை மற்றும் இந்தியக் கட்டுரையாளர்களுக்குக் கனடா சென்று வருவதற்கான வான்வழிச் செலவுச் சீட்டும் கனடாவில் தங்குமிட வசதிகளும் வழங்கப்படும்.

இதேநேரம் மாநாடு பற்றிய கூடுதல் விளக்கங்களை www.GlobalTamilConference.orgஎன்னும் இணைய தளத்தில் பார்வையிட முடியும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2.5 மில்லியன் டொலர் மோசடி- அதிகாரியின் உயிரிழப்புக்கு அரசின் தவறான முடிவுகளே காரணம்: விமல் வீரவன்ச சாடல்

2.5 மில்லியன் டொலர் மோசடி- அதிகாரியின் உயிரிழப்புக்கு அரசின் தவறான முடிவுகளே காரணம்: விமல் வீரவன்ச சாடல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்