புத்தர் சிலையை காணவில்லை : மட்டக்களப்பில் பதற்றம் (காணொளி)
தமிழரின் மேய்ச்சற் தரையான மாதவனை மயிலத்தமடு பகுதியில் அடாத்தாக வைக்கப்பட்ட புத்தர் சிலையை காணவில்லை எனத் தெரிவித்து மட்டக்களப்பு மாமாங்க விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் மட்டக்களப்பு மாமாங்க விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் இணைந்து புத்தர் சிலையை வைத்திருந்தனர்.
புத்தர் சிலை மாயம்
இவ்வாறு வைக்கப்பட்ட சிலை நேற்று இரவு முதல் காணாமற்போனதாக தெரிவித்து அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினரால் அங்கு பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அப்பகுதிக்கு சென்ற அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் கரடியனாறு காவல் நிலைய பொறுப்பதிகாரியை மிக மோசமான வார்த்தைகளால் பேசியதோடு அந்த பகுதியில் உள்ள அத்துமீறிய குடியேற்றவாசிகளை தூண்டிவிட்டு அங்குள்ள தமிழ் பண்ணையாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.