திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: நான்கு தேரர்களுக்கு விளக்கமறியல்!
திருகோணமலையில் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு தேரர்கள் மற்றும் ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி திருகோணமலையில் புத்தர் சிலையை அகற்ற முயற்சித்ததைத் தொடர்ந்து குறித்த அமைதியின்மை ஏற்பட்டது.
சட்டவிரோத கட்டுமானம்
எனினும், இவ்விடயம் தொடர்பில் கடலோர பாதுகாப்புத் துறையும் சட்டவிரோத கட்டுமானம் தொடர்பாக காவல்துறையிடம் முறைப்பாடு வழங்கியிருந்தது.

மேலும் புத்தர் சிலையை அகற்ற முயன்றபோது காவல்துறையினர் தேரர்கள் மற்றும் பிரதேசவாசிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்குக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் அழைக்கப்பட்டனர்.
மேலும் அந்தக் குழுவை ஜனவரி 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |