தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த பௌத்த தேரர்!
Sri Lanka Police
By pavan
நவகமுவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வந்த தேரர் ஒருவர் தனக்கு தானே தீ வைத்து உயிரை மாய்த்துள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் நவகமுவ காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
மேலும், கடுவெல நீதவான், அரசாங்க பரிசோதகர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் குறித்த இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உயிரிழப்புக்கான காரணம்

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, குறித்த தேரர் உடலுக்கு தீ வைத்த காரணத்தால் உயிரிழந்திருக்க கூடும் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த 81 வயதான குறித்த தேரர் தானே கொட்டில் ஒன்றை உருவாக்கி அங்கிருந்து தனது உடலுக்கு தீ வைத்ததாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்