வடக்கு - கிழக்கில் சட்டவிரோதமாக கட்டப்படும் புத்த கோயில்கள் : வலுக்கும் கண்டனம்

Anura Kumara Dissanayaka Eastern Province Northern Province of Sri Lanka Buddhism
By Theepan Dec 28, 2025 10:09 AM GMT
Report

வடக்கு- கிழக்குப் பிரதேசங்களில் திட்டமிட்டு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் பௌத்த ஆலய கட்டுமானங்கள் ஒருபோதும் இலங்கையில் அமைதியைக் கொண்டுவராது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.

சிஸ்டம் சேஞ்சை முன்வைத்து ஆட்சிபீடம் ஏறியுள்ள இடதுசாரி ஜனநாயகம் பேசும் இன்றைய அரசு அத்தகைய நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தி நாட்டின் நிலையான அபிவிருத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கோரியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களில் சிங்கள பௌத்த மக்கள் வாழாத இடங்களில் அடாத்தாகப் பிடித்த பல காணிகளில் இராணுவத்தினரின் உதவியுடன் புத்தகோயில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சட்டத்திற்கு புறம்பாக நிதியை பயன்படுத்திய அரசியல்வாதிகள்!

சட்டத்திற்கு புறம்பாக நிதியை பயன்படுத்திய அரசியல்வாதிகள்!

தையிட்டி விகாரை

இப்பொழுது ஆட்சியிலிருக்கின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இவற்றைத் தடுத்து நிறுத்தாமல் சட்டவிரோதமாகக் கட்டப்படும் புத்த விகாரைகளை இன்னும் ஆதரித்து செயற்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம் தையிட்டியில் தனியாருக்குச் சொந்தமான காணிகளைப் பறிமுதல் செய்து, தமிழ் மக்களின் எதிர்ப்பையும் மீறி, சட்டவிரோதமான முறையில் ஒரு பௌத்த ஆலயம் கட்டப்பட்டிருக்கின்றது.

வடக்கு - கிழக்கில் சட்டவிரோதமாக கட்டப்படும் புத்த கோயில்கள் : வலுக்கும் கண்டனம் | Buddhist Temple Sbuilt Illegally In The North East

நயினாதீவில் இருக்கும் நாகவிகாரையின் விகாராதிபதி, இந்தக் காணிகள் விகாரைக்கு உரித்தானதல்ல என்பதையும் அதில் கட்டப்பட்டிருக்கும் விகாரை சட்டவிரோதமானது என்பதையும் தமிழ் மக்கள் பௌத்தத்திற்கு எதிரானவர்களல்லர் என்பதையும் அவர்கள் தம்முடன் அன்புடன் பழகுகிறார்கள் என்பதையும் அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கின்றார்.

அத்துடன் ஐம்பத்து மூன்று வருடங்களாக தாம் இந்தப் பிரதேசத்தில் வசித்து அந்த மக்களுடன் பழகிவருகிறேன் என்ற அடிப்படையிலும் தையிட்டி நாகவிகாரை கட்டுமானமானது சட்டவிரோதமானது என்றும் சிங்கள மக்களுக்கு சிங்கள மொழிமூலம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கின்றார்.

நிலைமை அவ்வாறிருக்க, சட்டவிரோதமான விடயங்களை ஏற்கமாட்டோம் என்று கூறுகின்ற இந்த அரசாங்கம் சட்டரீதியாக அந்த மக்களுக்குச் சொந்தமான காணிகளைக் கொடுப்பதை விடுத்து, தொடர்ந்து அந்த மக்களுடன் பேரம் பேசுவதும் வேறிடத்தில் காணிகள் தருகிறோம் என்று கூறுவதும் சட்டவிரோதத்திற்குத் துணைபோவதாகவே பொருள்கொள்ளப்படும்.

யாழ். உள்ளக விளையாட்டு அரங்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பியது : வெளியான தகவல்

யாழ். உள்ளக விளையாட்டு அரங்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பியது : வெளியான தகவல்

பௌத்தத்திற்கு முதன்மைஸ்தானம்

வடக்கு-கிழக்கைப் பொறுத்தவரையில் பல இடங்களில், புராதான பௌத்த சின்னங்கள் இருக்கின்றன என்ற பெயரில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் பறிமுதல் செய்யப்பட்டு அங்கு புத்த கோயில்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

இது பௌத்த நாடு, நாங்கள் விரும்பிய எதனையும் செய்யலாம் என்ற மனோபாவத்துடன் பெரும்பாலான புத்த பிக்குகளும் படையினரும் அவர்களுக்கு சாதகமான அரசியல்வாதிகளும் செயற்பட்டு வருவதானது நாட்டின் ஒற்றுமைக்குக் குந்தகமானது என்பதை அவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத அரசியல் சாசனத்தில் பௌத்தத்திற்கு முதன்மைஸ்தானம் கொடுக்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள் ஆகியோரே மிகப் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

வடக்கு - கிழக்கில் சட்டவிரோதமாக கட்டப்படும் புத்த கோயில்கள் : வலுக்கும் கண்டனம் | Buddhist Temple Sbuilt Illegally In The North East

மிக சொற்பமான அளவில் சிங்கள பௌத்த மக்களும் வாழ்கிறார்கள். ஆகவே, அத்தகையதோர் பிரதேசத்தில் பௌத்தத்திற்கு முதலிடம் இருக்க வேண்டும் என்பது ஜனநாயகபூர்வமானதுமல்ல நியாயமானதுமல்ல.

வடக்கு-கிழக்கில் தற்பொழுது கட்டப்பட்டுவரும் புத்தகோயில்களின் சுற்றாடல்கள் அனைத்துமே தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களாகும். இந்தப் பிரதேசங்களில் சிங்கள பௌத்த மக்கள் எவருமே கிடையாது.

இவ்வாறான இடங்களில் புத்தகோயில்களைக் கட்டுவதென்பது புத்த பெருமானை அவமதிப்பதும் பௌத்தத்திற்குத் தீங்கு விளைவிக்கும் செயலுமாகும். உங்களது இந்தக் கட்டுமானங்கள் அனைத்தையும் நோக்குகின்றபொழுது வடக்கு--கிழக்கில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுகின்ற உங்களது நோக்கம் எங்களுக்குப் புரிகின்றது.

ஒருபுறத்தில் சமத்துவம், சகோதரத்துவம், இனங்களுக்கிடையில் ஐக்கியம் பற்றிப் பேசும் உங்கள் அரசாங்கம், இவ்வாறான நடவடிக்கைகளுக்குத் துணைபோவதென்பது நீங்கள் பேசுகின்ற விடயங்களை நிர்மூலமாக்குமே தவிர, நாட்டில் ஐக்கியத்தை உருவாக்காது என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியர்கள் அதிகம் விரும்பும் நாடுகளின் பட்டியலில் இலங்கை

இந்தியர்கள் அதிகம் விரும்பும் நாடுகளின் பட்டியலில் இலங்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், அவுஸ்திரேலியா, Australia

29 Dec, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனகராயன்குளம், Toronto, Canada, பெரியகுளம்

30 Nov, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், Saint-Denis, France

28 Dec, 2013
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, தமிழீழம், வைரவபுளியங்குளம், தமிழீழம்

22 Dec, 2019
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, கொழும்பு 6

24 Dec, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, India, Toronto, Canada

25 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, கொழும்பு

29 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு 14

29 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, Scarborough, Canada, Markham, Canada

09 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Toronto, Canada

07 Jan, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Toronto, Canada

26 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், சுவிஸ், Switzerland, London, United Kingdom

11 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, இணுவில் தெற்கு

31 Dec, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டக்கச்சி

25 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada, Ottawa, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, பக்ரைன், Bahrain, Maryland, United States

25 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வேலணை 5ம் வட்டாரம், Markham, Canada

25 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Mississauga, Canada

31 Dec, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

26 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, வல்வெட்டித்துறை ஊரிக்காடு

27 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Neasden, United Kingdom

27 Dec, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

28 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

25 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

21 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், திருச்சிராப்பள்ளி, India

27 Dec, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, நீர்வேலி வடக்கு

26 Dec, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சாவகச்சேரி

27 Dec, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில், Scarborough, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், New York, Rochester, United States

19 Dec, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, கோண்டாவில்

25 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, Toronto, Canada

21 Dec, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, விசுவமடு, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி