யாழில் தோன்றிய புத்தர் சிலை! ஆக்கிரமிப்பு அச்சத்தில் மக்கள்
Tamils
Jaffna
Sri Lanka
By pavan
யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளமையால் அப்பகுதி மக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
அகற்ற நடவடிக்கை
புத்தர் சிலையை அடுத்து குறித்த பகுதியில் மிகப்பெரிய விகாரை தோற்றம் பெறலாம் என அச்சப்படுகின்றனர். அத்தோடு இந்துப் பிரதேசமாக இருக்கும் இந்த இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆராய்ந்து, புத்தர் சிலையை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 4 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி