தீவிரமடையும் போர் பதற்றம்! நிதி ஒதுக்கீட்டில் அதிரடியாக செயற்படும் இஸ்ரேல்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடர்ந்து நிகழும் போரில் ஏற்பட்டுள்ள செலவுகளை முகாமை செய்வதற்கு பாதீட்டில் அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான (2024) பாதீட்டில் போர் செலவீனங்களுக்காக அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் மொத்த பாதீட்டுக்கான தொகை 13 லட்சத்து 41 ஆயிரத்து 981 கோடியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தில் கூடுதலாக 5 லட்சத்து 79 ஆயிரத்து 868 கோடி செலவினத்தில் அதிகரிக்கப்பட்டு அதில் இராணுவ செலவிற்கு ஒதுக்கி பாதீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
போருக்கான செலவீனங்க
போருக்கான செலவீனங்களை ஈடுகட்டவும் ராணுவ அமைப்பை பலப்படுத்தவும் பாதீட்டில் அதிகளவில் நிதி ஒதுக்கப்படுவதால், 2024-ம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.6 சதவீத பற்றாக்குறை ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 2024 மற்றும் 2025 ஆண்டில் 46 ஆயிரத்து 389 கோடி வரையில் நிதிச் சரிவு ஏற்படலாம் என்பதால் நாட்டில் வருமானத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வரி விதிப்பது
மேலும், வங்கிகளில் இருந்து கிடைக்கும் இலாப தொகைக்கு வரி விதிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து நிதிப் பிரச்சனைகளை சரிசெய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் நிதியமைச்சின் இயக்குநர் ஜெனரல் ஷ்லோமி ஹெய்ஸ்லர் தெரிவித்துள்ளார்.
5 மாதங்களுக்கு மேலாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இஸ்ரேல் ஹமாஸ் போரில், ஹமாஸ் அமைப்பை ஒழிக்காமல் இந்தப் போர் ஓயாது என்று இஸ்ரேல் சூளுரைத்து, தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |